தள்ளுவண்டி கடையில் முட்டை சாப்பிட்ட முதியவர் - நொடியில் பறிபோன உயிர்.! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலம் நாகர் கர்னூல் மாவட்டத்தில் உள்ள லிங்காலா, பிஜினப்பள்ளி, வட்டமோன் கிராமத்தைச் சேர்ந்த திருப்பத்தையா என்பவர்  சொந்த வேலையாக லிங்காளா கிராமத்திற்கு வந்துள்ளார். 

காலையில் உணவு சாப்பிடாததால் அதிக பசியுடன் இருந்த அவர் வேலையை முடித்துவிட்டு வரும்போது அங்குள்ள சென்னாம்பள்ளி சதுக்கம் பகுதியில், தள்ளுவண்டி ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட முட்டை ஒன்றை வாங்கி சாப்பிட்டு இருக்கிறார். 

பசி மயக்கத்தில் முட்டையை முழுவதுமாக வாயில் திணித்து சாப்பிட்டதால், முட்டை தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு முதியவர் மயங்கி விழுந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள், அவரை காப்பாற்ற முயன்றதற்குள் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த லிங்காளா காவல்துறையினர், விரைந்து வந்து திருபத்தையாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் குறித்து விசாரணையும் நடந்து வருகிறது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man died after eat egg


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->