மதுரை: தனியார் பள்ளியில் மாணவிக்கு கொடூரம்! ஆண் டெய்லர், ஆசிரியை உள்ளிட்ட 3 பேர் கைது!
madurai student complain Taylor arrest
மதுரை சுப்பிரமணியபுரம் மகளிர் போலீஸ் நிலையத்தில், 15 வயது பள்ளி மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் 3 பேர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மாணவியின் புகார்:
10ம் வகுப்பு படிக்கும் மாணவி, தனியார் பள்ளியில் சீருடை அளவெடுக்க ஆண் டெய்லர் மற்றும் பெண் உதவியாளர் வந்ததாக புகார் தெரிவித்துள்ளார்.
மாணவி எதிர்ப்பு தெரிவித்த போதும், வகுப்பு ஆசிரியை தலையிட்டுச் அளவெடுக்க கட்டாயப் படுத்தியதாக கூறினார்.
அளவெடுக்கும்போது, உடலின் தனிப்பாகங்களை தொட்டதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தும், அவர்கள் தகவலை அலட்சியமாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
போலீசார் நடவடிக்கை:
மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கவிதா, விசாரணை மேற்கொண்டார்.
ஆண் டெய்லர், அவருடைய பெண் உதவியாளர், வகுப்பு ஆசிரியை உள்ளிட்ட 3 பேர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது மூவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
English Summary
madurai student complain Taylor arrest