கோவில் சுவற்றில் பைபிள் வாசகம் - கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி சம்பவம்.! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள, கச்சிராயபாளையம் அடுத்த கரடிசித்துார் கிராமத்தில் சிவன்கோவில், பிள்ளையார்கோவில், பெருமாள் உள்ளிட்ட கோவில்களின் சுற்று சுவர்களில், கடந்த 12ம் தேதி இரவு மர்ம நபர்கள் பைபிள் வாசகங்களை சார்ட் பேப்பரில் கையால் எழுதி ஒட்டி சென்றனர். 

அந்த போஸ்டரில், சிலைகளை ஒழித்து கட்டுவோம். 'பொதுமக்களுக்கு ஒரு கண்டனம்' என்ற தலைப்பில் 'இப்படிக்கு அந்நியன்' என்ற பெயரில் பல கருத்துக்களை எழுதியிருந்தனர். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தனர்.

அதன் படி போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அதே ஊரைச் சேர்ந்த சந்தானம் மகன் கிறிஸ்துராஜ் என்பவர், இந்தச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இது தொடர்பாக போலீசார் தெரிவித்ததாவது:- 'கிறிஸ்துராஜ் பாதிரியார் பயிற்சி முடித்து, வீட்டின் அருகில் திருச்சபை அமைத்து, கிறிஸ்து மதம் குறித்து பொது மக்களுக்கு போதனை செய்து வருகிறார். அப்பகுதி மக்கள் பெரும்பாலானோர் கோவில்களுக்கு சென்று வருகின்றனர்.

இவர் நடத்தும் திருச்சபைக்கு மக்கள் அதிகம் வராததால் ஆத்திரமடைந்த கிறிஸ்துராஜ், கடந்த மாதம் அப்பகுதி கோவில் சிலைகளை சேதபடுத்தியுள்ளார். நேற்று முன்தினம் இரவு கோவில் சுவர்களில் மதம் சார்ந்த வசனங்களை எழுதி ஒட்டியுள்ளார். அவரை கைது செய்துள்ளோம்" என்றுத் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for paste baible slogan in temple wall at kallakurichi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->