தர்மபுரியில் சோகம் - மின்வேலியில் சிக்கி வாலிபர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


தர்மபுரியில் சோகம் - மின்வேலியில் சிக்கி வாலிபர் உயிரிழப்பு.!

வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் தாங்கள் பயிரிட்டுள்ள நெற்பயிர்களை காட்டுப்பன்றிகள், யானைகள் உள்ளிட்ட விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பதற்காக விவசாய நிலத்தைச் சுற்றிலும் சட்டவிரோதமாக மின்வேலிகள் அமைத்துள்ளனர்.

இதையறியாத விலங்குகள் விவசாய நிலத்திற்கு வரும்போது மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. விலங்குகள் மட்டுமில்லாமல், மனிதர்களும் சில நேரங்களில் மின்சாரம் தாக்கி உயிரிழக்கின்றனர்.

அந்தவகையில், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சூடானூர் கிராமத்தை சேர்ந்த முனி ராஜின் மகன் நவீன் என்பவருக்கு, வனப்பகுதியை யொட்டி விவசாய நிலம் உள்ளது. அந்த வயலில் நவீன் நெல் பயிரிட்டிருந்தார்.

இந்த நெற்பயிர்களை கடந்த சில நாட்களாக காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வந்துள்ளது. இதனால், நவீன் காட்டுப்பன்றிகளிடம் இருந்து நெற்பயிரை பாதுகாக்க  வயலை சுற்றி மின்வேலி அமைத்துள்ளார்.

இந்த நிலையில், நவீன் நேற்று காலை வயலுக்கு செநின்றுள்ளார். அங்கு அவர் வயலில் மின்வேலி இருப்பது தெரியாமல் சென்றுள்ளார். இதனால், நவீன் மீது மின்சாரம் பாய்ந்தது.

இதில், பலத்த காயமடைந்த நவீன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man died for electric fence shock in dharmapuri


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->