மனைவி, பிள்ளைகளை கொலைச் செய்து விட்டு தற்கொலை செய்த ஐடி ஊழியர்.. சென்னையில் நடந்த அவலம்...! - Seithipunal
Seithipunal


மனைவி குழந்தைகளை கொலை செய்து விட்டு கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை, பொழிச்சலூரை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரா. இவருக்கு திருமணமாகி காயத்ரி என்ற மனைவியும் நித்யஸ்ரீ என்ற மகளும் ஹரிகிருஷ்ணன் என்ற மகனும் உள்ளனர். ஐடி ஊழியரான இவர் நேற்று தனது திருமணநாளை கொண்டாடியுள்ளார்.

அதன் பின் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு மயக்கமருந்து கொடுத்து விட்டு மரம் அருக்கும் ரம்பத்தால் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு அவரும் ரம்பத்தால் அறுத்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலைக்கு முன் அவர் எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அதில், கடன் தொல்லை அதிகமாக இருப்பதாகவும் அதனால் தற்கொலை செய்து கொண்டதாகவும் எழுதி வைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Man killed His Family and Committed Suicide


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->