கொதிக்கும் எண்ணையை தலையில் ஊற்றிக்கொண்ட முதியவர் - தீவிர விசாரணையில் போலீசார்.!!
man poured boiling oil on head in namakkal
கொதிக்கும் எண்ணையை தலையில் ஊற்றிக்கொண்ட முதியவர் - தீவிர விசாரணையில் போலீசார்.!!
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்திவேலூர் பேருந்து நிலையம் அருகே ஒரு நபர் சாலையோரம் அமர்ந்து அங்கிருந்த கூரான கற்களை எடுத்து தனது கை கால்களை குத்தி கிழித்துக் கொண்டு இருந்தார். இதைப்பார்த்த பொதுமக்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு மருத்துவர்கள் அந்த நபருக்கு சிகிச்சை அளித்து மருத்துவமனையில் இருந்து வெளியே அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் அந்த நபர் அரசு மருத்துவமனைக்கு அருகே உள்ள சாக்கடையில் குதித்துள்ளார் இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை அங்கிருந்து விரட்டியடித்துள்ளனர்.
இதையடுத்து அந்த நபர் அங்கிருந்து வேறு பகுதிக்குச் சென்று விட்டு மீண்டும் இரவு வேலூர் பிரியாணி கடை இருக்கும் பகுதிக்கு வந்துள்ளார். அங்கு சில்லி சிக்கன் போடுவதற்காக அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த எண்ணெயை எடுத்து தன் தலையில் ஊற்றிக் கொண்டார்.
இதைப்பார்த்த அப்பகுதியில் இருந்தவர்கள் அங்கிருந்து தலைத் தெறிக்க ஓடினர். அப்போது அவர் சூடு தாங்காமல் அலறித் துடித்தார். இந்த சம்பவம் தொடர்பாக அக்கம் பக்கத்தினர் பரமத்திவேலூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி விரைந்து வந்த போலீஸார் அவரை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே இந்தச் சம்பவம் குறித்து பரமத்தி வேலூர் போலீஸார் விசாரணை நடத்தியதில் அந்த நபர் நாமக்கல்லை அடுத்துள்ள ரெட்டிபட்டியைச் சேர்ந்த கருப்பண்ணன் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா? அல்லது குடிபோதையில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
man poured boiling oil on head in namakkal