தெரு தெருவாக போஸ்டர் ஒட்டி பெண் தேடும் இளைஞர்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


மணமகள் தேவை என இளைஞர் ஒருவர் ஒட்டியுள்ள போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மதுரையில் உள்ள சுவர்களில் ஒட்டப்படும் அரசியல், சினிமா நடிகர்கள் குறித்தான விளம்பர சுவரொட்டிகள் எப்போதும் பேசு பொருளாகி, வைரலாவது வழக்கம். அந்த வகையில் தற்போது, மணமகள் தேவை என இளைஞர் ஒருவர் ஒட்டியுள்ள போஸ்டர் வைரலாகி வருகிறது.

 90-களில் பிறந்த மதுரை வில்லாபுரம் அருகே மீனாட்சி நகரைச் சேர்ந்த 27 வயதுடைய ஜெகன் என்ற இளைஞர், மாத வருமானமாக 40 ஆயிரம் சம்பாதிப்பதுடன் சொந்தமாக நிலமும் கொண்டிருந்த நிலையிலும் தனக்கு திருமணம் ஆகாத விரக்தியில், மதுரை மாநகர், புறநகர் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுவர்களில் மணமகள் தேவை என விளம்பர சுவரொட்டி அடித்து பெண் தேடும் படலத்தை துவக்கி உள்ளார்.

ஏற்கனவே 2K கிட்ஸ் திருமணம் முடித்து குழந்தைகளுடன் வலம் வருவதால், பல 90's கிட்ஸ்களுக்கு திருமணம் ஆகாமல் இருந்து வரும் நிலையில், தற்போது நூதனமுறையில் மணமகள் தேவை என்று இந்த இளைஞர் ஒட்டியுள்ள போஸ்டர் 90's கிட்ஸ் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Man wall poster advertisement in madurai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->