மின்சாரத்தடை || கையில் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் செய்த மக்கள்.!
mantharakuppam sivaji nagar powercut issue
கடலூர் மாவட்டம், நெய்வேலி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 15 நாட்களாக மின்சாரமும், குடிநீரும் வழங்கப்படவில்லை என்று கூறி, பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் தீப்பந்தத்தை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மந்தாரக்குப்பம் அருகேயுள்ள திருவள்ளுவர் நகர், சிவாஜி நகர், ஐடிஐ நகர் பகுதிகளில் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்த பகுதியில் கடந்த 15 நாட்களாக குடிநீர் மற்றும் மின்சாரம் சரியாக வழங்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அந்த பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மின்சாரத்தடை காரணமாக தேர்வுக்கு மாணவர்கள் படிக்க முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளனர்.
இதனை அடுத்து நேற்று அந்த பகுதியை சேர்ந்த மாணவர்கள் மற்றும் அந்த பகுதி வாசிகள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியும், தீப்பந்தம் கொளுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது பெண்கள், ஆண்கள் கையில் மெழுகுவர்த்தி, தீப்பந்தம் ஏந்தி நிற்க, பள்ளி மாணவர்கள் அந்த வெளிச்சத்தில் படம் படித்து கொண்டு இருந்தனர்.
இந்த பகுதிக்கு என்எல்சி நிர்வாகம் தரப்பில் இருந்துதான் மின்சாரம் வழங்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
English Summary
mantharakuppam sivaji nagar powercut issue