தூத்துக்குடி மாவட்டம் முழுதும்.. மார்ச் 7-ல் தடை.! மீறினால் கடும் நடவடிக்கை.!
March 7 Ban dron cameras In Tuticorin
தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் மார்ச் 7ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது பற்றிய அறிவிப்பை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டு இருக்கின்றார். அதன்படி, "வரும் மார்ச் 7ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை புரியும் காரணத்தால் அந்நாளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தின் இரு எல்லைகளான ஸ்ரீ வைகுண்டம் வட்டம் பசவபுரம் கிராமத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை உள்ள பகுதிகளில் ட்ரோன்கள் எக்காரணத்தைக் கொண்டும் பறக்க விடப்படக்கூடாது.
இந்த தடை உத்தரவானது காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கடைபிடிக்கப்பட வேண்டும். அன்றைய தினம் ட்ரோன்கள் பறக்க விடப்படக்கூடாது. இந்த தடை உத்தரவை மீறி நடப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்."என்று தெரிவித்துள்ளார்
English Summary
March 7 Ban dron cameras In Tuticorin