திமுக ஆட்சியில் அத்திக்கடவு-அவினாசி திட்டம் விரைவுபடுத்தபட்டுள்ளது - அமைச்சர் முத்துச்சாமி .! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அத்திக்கடவு-அவினாசி திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் முத்துச்சாமி கொட்ட நிறைவுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது;-

"தி.மு.க. அரசு பொறுப்பேற்றபோது அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை விரைவுபடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். அதன்படி இந்த திட்டம் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. அதேசமயம், 6 பம்பிங் நிலையங்களில் முதல் 3 நிலையங்களுக்கு இடையே உள்ள நிலத்தை பயன்பாட்டிற்கு எடுப்பதில் தொய்வு ஏற்பட்டு பணிகள் நடைபெறவில்லை.

நிலங்களை கையகப்படுத்த அரசின் சார்பில் நேரடியாக விவசாயிகளிடம் பேசி நிலத்தை பயன்படுத்திக் கொள்ள அனுமதி பெற்றோம். விவசாயிகளிடம் நிலத்தை பெற்ற பிறகு தண்ணீர் பற்றாக்குறையால் திட்டத்தை செயல்படுத்துவதில் கால தாமதம் ஏற்பட்டது.

கடந்த ஆட்சியில் முதலிலேயே நிலத்தை விவசாயிகளிடம் இருந்து பெற்றிருந்தால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டு இருக்காது. 1,416 விவசாயிகளின் நிலத்தை இந்தத் திட்டத்திற்கு பயன்படுத்தி உள்ளோம். அவர்களுக்கு நிதியை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன." endruth தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister muththuchsami press meet about avththikadavu avinasi scheme


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->