அப்டேட் இல்லாத அரசியல் தலைவராக சீமான் உள்ளார் - அமைச்சர் மா. சுப்பிரமணியன்..!
minister subramaniyan press meet about seeman
தமிழகத்தின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:- தமிழகத்தில் உள்ள தலைவர்களில் அப்டேட்டில் இல்லாத அரசியல் தலைவராக சீமான் உள்ளார்.
மருத்துவ பணியிடங்கள் நிரப்பப்படவில்லை என்று அவர் அறிக்கை வெளியிடுகிறார். முப்பத்தாறு மருத்துவ கல்லூரிகளில் தகுதிபெற்ற நிரந்தரமான முதல்வர்கள் பொறுப்பேற்று ஒரு மாதம் ஆகிறது.
மருத்துவர்கள் பொறுப்பேற்று ஒரு மாதமான நிலையில் அரசியல் தலைவராக சீமான் குற்றம் சாட்டுவது வருத்தம் தருகிறது. பதினான்கு பேரும் அக்டோபர் 3-ந்தேதியே பணியில் சேர்ந்துவிட்டனர்" என்று அவர் சீமானுக்கு பதில் அளித்துள்ளார்.
English Summary
minister subramaniyan press meet about seeman