அம்மா உணவகம் மூடப்படவில்லை - எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் அன்பரசன் பதில்.! - Seithipunal
Seithipunal


ஆலந்தூர் தொகுதியில் அடங்கிய வாணுவம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தை மூடிவிட்டு அரசு பள்ளி இயங்கி வருவதாகவும், அப்பள்ளி மாணவர்களுக்கு வேறு இடம் வழங்கிட வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதற்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் பதில் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:-"வாணுவம்பேட்டை புதுத் தெருவில் சென்னை துவக்கப் பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. பள்ளியின் வளாகத்தில் போதிய இடம் இருந்ததால் அ.தி.மு.க. ஆட்சியில் அம்மா உணவகம் துவங்கப்பட்டது.

தற்போது அந்த வளாகத்தில் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மையமும் கட்டப்பட்டு வருகிறது. மேலும், அங்கன்வாடிக்கு அம்மா உணவகத்தின் நுழைவாயில் வழியாகத்தான் செல்ல வேண்டும். இந்த பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அம்மா உணவகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதை மூடவில்லை.

ஆனால் அம்மா உணவகத்தில் பள்ளி நடப்பதாக கட்டுக்கதை விட்டு தலைமைக்கு தகவல் தந்ததை தீர விசாரிக்காமல் மக்கள் மத்தியில் அம்மா உணவகங்களை மூடுவது போன்ற ஒரு மாய தோற்றத்தை உருவாக்க பழனிசாமி இதுபோல் ஒரு அறிக்கையை விட்டுள்ளார்" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister tm anbarasan explain amma hotel close in alandur


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->