வேட்டையன் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்த ரசிகர்கள் விரட்டியடிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று எல்லோராலும் அழைக்கப்படும் ரஜினிகாந்த், தற்போது 'வேட்டையன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். ரஜினிகாந்தின் 170-வது படமான இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. 

அமிதாப் பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை இயக்குனர் த. செ. ஞானவேல் இயக்கியுள்ளார். 'வேட்டையன்' படம் அடுத்த மாதம் 10-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவுள்ள நிலையில், படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், 'வேட்டையன்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், ரஜினிகாந்த், மஞ்சுவாரியர் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். மேலும், இதில் கலந்துகொள்ள ரசிகர்களுக்கு டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. இதை பயன்படுத்தி ரசிகர்கள் கலந்துகொண்டனர்.

அப்போது, டிக்கெட் வைத்திருந்தும் பல ரசிகர்களுக்கு வேட்டையன் இசை வெளியீட்டு விழாவிற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதுடன் அவர்கள் விரட்டியும் அடிக்கப்பட்டிருக்கின்றனர்.அதாவது, விழாவிற்குள் அனுமதிக்கப்பட்டுள்ள ரசிகர்கள் அதிகமாக இருப்பதாக கூறி பின்னர் வந்த ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு ரசிகர்கள் தங்கள் வருத்தத்தையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fans chased away in vettaiyan movie audio launch


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->