மூன்று நாள் பயணமாக இன்று அமெரிக்க செல்கிறார் பிரதமர் மோடி! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் உள்ள டெல்வாரே நகரில் குவாட் அமைப்பின் மாநாடு நடைபெற உள்ளது.
இந்த குவாட் அமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் அங்கம் வகிக்கிறது, நடக்கிறது. அமெரிக்க தினர் ஜோ பைடன் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று  அமெரிக்கா செல்கிறார்.


இந்த குவாட் அமைப்பு கடந்த 2023-ம் ஆண்டில் செய்த பணிகள் குறித்தும், எதிர் வரும் ஆண்டில் செய்ய வேண்டிய பணிகள் மற்றும் இந்தோ பசுபிக் பிராந்திய நாடுகளுக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.

மறுநாள் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

தொடர்ந்து வரும் 23-ம் தேதி எதிர்காலத்திற்கான மாநாடு என்ற தலைப்பில் ஐக்கிய நாடுகள் சபையில் நடக்கும் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். பிரதமர் மோடி  இந்த பயணத்தின் போது பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prime Minister Modi is going on a three day visit to the US today


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->