புரட்டாசி மாதத்தில் ஏன் திருமண ஏற்பாடுகளை செய்யக்கூடாது? ஆன்மீக காரணமும் அறிவியல் காரணமும்!
Why not make wedding arrangements in Puratasi month Spiritual reason and scientific reason
புரட்டாசி மாதத்தில் ஏன் திருமணங்கள் நடத்தக் கூடாது? இது பாரம்பரிய நம்பிக்கைகள் மட்டுமின்றி, அறிவியல் ரீதியான சில காரணங்களும் உள்ளது.
பொதுவாக புரட்டாசி மாதம் பெரும்பாலும் பெருமாளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மாதமாகக் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் பக்தர்கள் விரதம் இருந்து, பெருமாளை பாடி தியானம் செய்வதற்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள். திருமணம் போன்ற பெரிய நிகழ்வுகள் இந்த ஆன்மிக மனநிலைக்கு இடையூறாக இருக்கும் என்பதால், அதனை தவிர்க்கிறார்கள் என பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்த மாதம் சமாதானமான ஆன்மிக நேரம் என்பதால், மகிழ்ச்சியான மற்றும் சமூக நிகழ்வுகளைத் தவிர்க்க வேண்டும் என்று நம்புகிறார்கள். திருமணம் என்பது பெரிய சமூக விழாவாக இருப்பதால், இந்த அமைதியான நேரத்தில் அது ஏற்றதல்ல எனக் சொல்லப்படுகிறது.பஞ்சாங்கத்தின் அடிப்படையில் பார்க்கபோனோமே ஆனால் , புரட்டாசி மாதம் திருமண நிகழ்ச்சிக்கு கேட்ட காலமாக கருதப்படுகிறது. இது ஜோதிட ரீதியாக உகந்ததாக இல்லாததால், சில மாதங்களில் திருமண நிகழ்ச்சிகளைத் தவிர்க்குமாறு பல ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர்.
அறிவியல் அடிப்படையில் பார்க்கபோனால், புரட்டாசி மாதம் பருவ மாற்றத்திற்கான முக்கிய காலமாகும். இது முக்கியமாக மழைக்காலம் முடியும் நேரமாகும். மழை காலம் மற்றும் பருவநிலை மாற்றத்தால், இதுவே நோய்கள் பரவும் நேரமாகவும் இருக்கும். திருமண நிகழ்வுகள் கூட்டமாக நடைபெறுவதால், இந்த நேரத்தில் மனிதர்களுக்கு நோய்கள் பரவும் வாய்ப்பு அதிகரிக்கும். இதனால், பொதுவாக பெரிய கூட்டங்கள், திருமண விழாக்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளைத் தவிர்க்குமாறு அறிவியல் ரீதியாக சொல்லப்படுகிறது.
புரட்டாசி மாதம் பரிகாரங்களுக்கான காலமாகக் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் தீய சக்திகளை நீக்கும் பரிகாரங்கள் மேற்கொள்ளப்படுவதால், சுபகாரியங்களைச் செய்ய வேண்டாம் என்பதே பாரம்பரிய நம்பிக்கை.புரட்டாசி மாதம் ஆன்மிக மற்றும் அறிவியல் காரணங்களின் அடிப்படையில் திருமணங்களுக்குப் பொருத்தமில்லாத காலமாகக் கருதப்படுகிறது. ஆன்மிகம், சுகாதார காரணங்கள் மற்றும் பருவநிலை மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, திருமணங்கள் இந்த மாதத்தில் தவிர்க்கப்படுகின்றன.
English Summary
Why not make wedding arrangements in Puratasi month Spiritual reason and scientific reason