கியூ ஆர் கோடை பயன்படுத்தி பண மோசடி - ஒடிசாவில் பயங்கரம்.!!
money fraud use qr code in odisa
கியூ ஆர் கோடை பயன்படுத்தி பண மோசடி - ஒடிசாவில் பயங்கரம்.!!
ஒடிசா மாநிலத்தின் தலைநகரான புவனேஸ்வரை தலைமையிடமாக கொண்டு நிதி தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிதி நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் நொய்டாவை சேர்ந்த மற்றொரு நிதி தொழில்நுட்ப நிறுவனத்துடன் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு ஒப்பந்தம் செய்து கொண்டது.
அதன் கீழ் வணிக பயன்பாட்டிற்காக புவனேஸ்வர் நிதி தொழில்நுட்ப நிறுவனம், நொய்டா நிறுவனத்துக்கு யூபிஐ விவரங்களை வழங்கியது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட நொய்டா நிறுவனத்தின் இயக்குனர்களான கரண் சிங் குமார் மற்றும் அவரது சகோதரர் லாலு சிங் உள்ளிட்டோர் புவனேஸ்வர் நிதி நிறுவனத்தின் கியூ.ஆர். கோடுக்கு பதிலாக தங்களது நிறுவனத்தின் கியூ.ஆர் கோடை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டனர்.
![](https://img.seithipunal.com/media/CRIME 004.jpg)
இதன் மூலம் புவனேஸ்வர் நிறுவனத்துக்கு செல்ல வேண்டிய சுமார் ரூ.14 கோடியை நொய்டா நிறுவனத்தின் இயக்குனர்கள் எடுத்துக்கொண்டனர். இதற்கிடையே புவனேஸ்வர் நிதி நிறுவனம் தங்களது வங்கி கணக்கின் இருப்பை பரிசோதனை செய்தது. அப்போது தான் நொய்டா நிறுவனம் பண மோசடி செய்தது அம்பலத்துக்கு வந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த புவனேஸ்வர் நிறுவனம் உடனடியாக சம்பவம் குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தது. அந்த புகாரின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கியூ.ஆர். கோடை பயன்படுத்தி மோசடி நடந்தது உறுதி செய்யப்பட்டது.
இதை அடுத்து போலீசார் நொய்டா நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான கரண் சிங் குமார் என்பவரைக் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
money fraud use qr code in odisa