ஸ்டாலின் சொன்னதால் தான் வாக்களித்தோம் - கொந்தளித்த திமுக பிரமுகர் - ஆடிப்போன கார்த்திக் சிதம்பரம்.! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்ட பேருந்து நிலையத்தை மேம்படுத்துவது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், எம்.பி கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு வந்த திமுக பிரமுகரான குமாரசாமி, ‘‘மு.க.ஸ்டாலின் கூறியதால் தான் உங்களுக்கு வாக்களித்தோம். ஆனால், சிவகங்கை வளர்ச்சி அடையாமல் அப்படியே இருக்கிறது. 

பேருந்து நிலையமே மிக மோசமாக இருப்பதை பாருங்கள்’’ என்று ஆவேசமாக பேசினார். உடனே அருகில் இருந்த காங்கிரஸார் குமாரசாமியை சமரசம் செய்து, அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து அங்கு ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், “சிவகங்கையில் அனைத்து வசதிகளுடன் பேருந்து நிலையம் மேம்படுத்தப்படும். 

புதிதாக பொறுப்பேற்ற மத்திய அரசில் முக்கிய அமைச்சர்களாக மீண்டும் பாஜகவைச் சேர்ந்தவர்களையே நியமித்துள்ளனர். அதிலும் பழைய நபர்களே உள்ளனர். கூட்டணி கட்சிகளுக்கு முக்கியமில்லாத அமைச்சர் பதவிகளே கொடுக்கப்பட்டுள்ளன. மக்கள் பிரச்சனையைத் தீர்க்கும் மனப்பான்மை அவர்களிடம் இல்லை. இதனால் ஏமாற்றம் தான் கிடைக்கும்” என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mp karthik sithambaram visit sivakangai bus stand


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->