சிறையில் உருவான நட்பு.. வெளியில் வந்து கூட்டாக செய்த செயல்.. நாமக்கல்லில் பரபரப்பு.!  - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் அருகே லாரியை கடத்திய மூன்று நபர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்லக்காபாளையம் பகுதியில் தினேஷ் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்தமாக வைத்திருந்த லாரி ஒன்று திடீரென காணாமல் போனது. இது குறித்து தினேஷ்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் வாகன தணிக்கையின் போது தினேஷ்குமார் லாரியை கைப்பற்றியுள்ளனர்.

இந்த லாரி திருட்டில் ஈடுபட்ட ஜேசுராஜ், கவியரசன் மற்றும் கண்ணன் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரித்ததில் இந்த மூன்று பேரும் சிறையில் இருந்தபோது நண்பர்கள் ஆகியது தெரியவந்துள்ளது. விடுதலையாகி வெளியில் வந்த போதும் அவர்கள் தங்களது நட்பை தொடர்ந்துள்ளனர். 

அதன்பின் மூன்று பெரும் சேர்ந்து திருடுதல் வேட்டையை துவங்கியது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து, அவர்கள் மூன்று பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். சிறையில் ஏற்பட்ட நட்பினை தொடர்ந்து, மீண்டும் திருட்டு வேளையில் ஈடுபட்ட சம்பவம் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Namakkal prison Friendship make shock to Police


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->