கோவை : வீடு புகுந்து பாலியல் தொல்லை அளித்த வாலிபர் - போகசோவில் கைது.!
near covai man arrested for sexuall harassment case
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள திருமலை பாளையத்தைச் சேர்ந்த பதினேழு வயது மாணவி ஒருவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார்.
தற்போது பள்ளிகளில் பொதுத் தேர்வு நடைபெற்று வருவதால், மாணவி வீட்டில் இருந்துள்ளார். இதை அறிந்த அதே பகுதியைச் சேர்ந்த காளீஸ்வரன் என்பவர் மாணவியின் வீட்டிற்கு வந்துள்ளார்.
அங்கு அந்த மாணவியிடம் குடிப்பதற்குக் கொஞ்சம் தண்ணீர் கொடு என்றுக் கேட்டுள்ளார். இதையடுத்து அந்த மாணவி தேனீர் எடுப்பதற்காகச் சென்றபோது காளீஸ்வரனும் பின் தொடர்ந்து உள்ளேச் சென்றுள்ளார்.
அதன் பின்னர் காளீஸ்வரன் தனது நண்பரின் மகள் என்று கூட பார்க்காமல் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவி கத்திக் கூச்சலிட்டுள்ளார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் காளீஸ்வரன் அங்கிருந்து தப்பித்த்துச் சென்றுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மாணவி போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி, போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து
காளீஸ்வரனை கைது செய்தனர். பிறகு போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
English Summary
near covai man arrested for sexuall harassment case