திண்டுக்கல் : விளையாட்டால் வந்த விபரீதம்..! கணவரை பறிகொடுத்துவிட்டு கதறி அழுவும் மனைவி.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அருகே எரியோடு பாண்டியன் நகரை சேர்ந்தவர்கள் அமீர்-மகாலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், இன்று மகாலட்சுமியும், அமீரும் தங்களின் துணிகளை துவைப்பதற்காக பாண்டியன் நகர் அருகே உள்ள பாறைக்குழிக்கு சென்றுள்ளனர். 

அங்கு மகாலட்சுமி துணி துவைத்து கொண்டிருந்த போது அவருக்கும் கணவர் அமீருக்கும் இடையே சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், அமீர், நான் தண்ணீருக்குள் குதிக்க போகிறேன் என்று விளையாட்டு தனமாக பேசிகொண்டு இருந்த போது திடீரென கால் தடுமாறி தண்ணீருக்குள் விழுந்துள்ளார். 

இதையடுத்து கணவர் தன்னுடன் விளையாடுவதாக நினைத்துக் கொண்ட மகாலட்சுமி கணவர் கீழ் விழுந்ததை கண்டு கொள்ளாமல் இருந்துள்ளார். இருப்பினும், சில நேரம் ஆகியும் கணவர் தண்ணீரை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த மகாலட்சுமி கத்தி கூச்சலிட்டுள்ளார்.

இதைக்கேட்டு, அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து தண்ணீருக்குள் இறங்கி தேடினர். ஆனால், அமீர் கிடைக்காததால், சம்பவம் தொடர்பாக வேடசந்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் படி, அவர்கள் விரைந்து வந்து தண்ணீரில் இறங்கி அமீரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதற்கிடையே கணவனை இழந்த துக்கம் தாங்க முடியாமல் மகாலட்சுமி தனது இரண்டு குழந்தைகளுடன் கதறி அழுதது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near dindukal young man died for fell down in water


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->