ஈரோடு : தனியார் நிறுவனத்தில் பாய்லர் வெடித்து ஒருவர் பலி.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் உள்ள வெண்டி பாளையத்தில் கடந்த 10 வருடமாக தனியார் பால் பொருள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் பால் சம்பந்தப்பட்ட பொருட்களை தயாரித்து வருகிறது. இதில் கருமாண்டம் பாளையத்தை சேர்ந்த ராமன் என்ற முதியவர் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். 

இவர் இன்று அதிகாலை தண்ணீரை சூடாக்கும் பாய்லரை இயக்கிக் கொண்டிருந்தார். அப்போது அதிக அழுத்தத்தின் காரணமாக பாய்லர் திடீரென வெடித்தது. இதில் ராமன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சடைந்த மற்றொரு ஊழியர் இது குறித்து அருகிலிருந்தவர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் அனைவரும் வந்து பார்த்து விட்டு சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அந்த தகவலின் படி, போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ராமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இது தொடர்பாக வருவாய்துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாய்லர் வெடித்து முதியவர் உயிரிழந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near erode old man died for boiler explossion


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->