கன்னியாகுமரி : மகனை பார்க்க மறுத்த மனைவியை கொலை செய்த கணவர் கைது.!
near kanniyakumari wife died for husband attack
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரணியல் அருகே குருந்தன்கோடைச் சேர்ந்தவர் ஜோஸ்லின் பாபு-மேனகா தம்பதியினர். இவர்களுக்கு பன்னிரண்டு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இதையடுத்து மேனகா திக்கணங்கோடு பகுதியை சேர்ந்த ஜெயபால் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு எட்டு வயதில் ஆண் குழந்தை ஒன்றுள்ளது.
இவர்களுக்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு மேனகா குருந்தன்கோடு வந்துவிட்டார். இதற்கிடையே ஜெயபால் கடந்த 19-ந் தேதி குருந்தன்கோடு வந்துள்ளார். அங்கு ஜெயபால் மேனகாவை வழிமறித்து அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் மேனகாவுக்கு பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, அருகில் ஜெயபால் அருகில் நின்ற மகளையும் வெட்டியுள்ளார். அதில், சிறுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால், இருவரும் அலறியுள்ளனர். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதைப்பார்த்த ஜெயபால் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதையடுத்து, அருகிலிருந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இவர்களில் மேனகா சிகிச்சை பலன் இல்லாமல் கடந்த 24-ந் தேதி உயிரிழந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் குற்றவாளியான ஜெயபாலை தேடி வந்தனர். அப்போது, ஜெயபால் திக்கனங்கோடு பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்குத் தகவல் வந்தது. அதன் படி, போலீசார் அந்த இடத்திற்கு சென்று ஜெயபாலைக் கைது செய்தனர்.
அதன் பின்னர் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் மோகன தன மகனை பார்க்க மறுத்ததால் நான் அவரை கொலை செய்தேன் என்று ஒப்புக்கொண்டார். இதையடுத்து, போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
English Summary
near kanniyakumari wife died for husband attack