வரலாற்றிலேயே முதன் முறையாக வழக்கு பதிவு செய்யப்பட்ட 9 நாட்களில் தீர்ப்பு வழங்கிய சம்பவம்.!
near kodaikanal sexual harassment case judgement in nine days at first time
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பூம்பாறை பகுதியை அடுத்து கூக்கால் பிரிவு அருகே கடந்த மூன்றாம் தேதி மன்னவனூரைச் சேர்ந்த ஜீவா மற்றும் பூண்டியைச் சேர்ந்த பாலமுருகன் உள்ளிட்ட இருவரும் மது அருந்தி விட்டு வந்துக்கொண்டிருந்தனர்.
அப்போது, பெண் ஒருவர் காரில் வந்துள்ளார். அவரை மறைத்து ஜீவா மற்றும் பாலமுருகன் உள்ளிட்ட இருவரும் லிப்ட் கேட்டுள்ளனர். அந்த பெண்ணும் அவர்களுக்கு லிப்ட் கொடுத்துள்ளார்.
இதையடுத்து அந்த வாலிபர்கள் காரில் ஏறிய சிறிது நேரத்தில் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் அவர்களை காரில் இருந்து இறக்கி விட்டு, பின்னர் சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக கொடைக்கானலில் உள்ள இரண்டாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது. அங்கு போலீசாரும் உடனடியாக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்தது.
இந்தநிலையில், இந்தவழக்குத் தொடர்பாக நீதிபதி கார்த்திக் தெரிவித்ததாவது, "பாலியல் தொல்லை கொடுத்த இரண்டு வாலிபர்களுக்கும் தலா ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
மேலும், அவர் தனது தீர்ப்பில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுப்பதற்கு தண்டனைகளை கடுமையாக்க வேண்டும். மாநிலத்தில் அனைத்து ஆண்களும் பெண்களை சரியான முறையில் நடத்துகிறார்களா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.
இது போன்ற பாலியல் சம்பவங்கள் உடனடியாக தடுக்கப்பட வேண்டும் என்ற வகையில் வழக்கு பதிவு செய்த ஒன்பது நாட்களில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றுத் தெரிவித்தார். இந்த சம்பவம் நீதித்துறை வரலாற்றில் ஒரு புதிய அம்சமாக கருதப்படுகிறது.
English Summary
near kodaikanal sexual harassment case judgement in nine days at first time