பொள்ளாச்சி : வீடு தேடி சென்று மிரட்டி பெண் கேட்ட வாலிபர்.!
near pollachi young man threatening girl friend father
கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியை சேர்ந்த கூலித் தொழிலாளியான ஒருவர் கோட்டூர் காவல்நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில் அவர் தெரிவித்திருப்பதாவது:- "எனக்கு பதினேழு வயதில் ஒரு மகள் இருக்கிறார். அவர் ஒன்பதாம் வகுப்பு வரை படித்து முடித்து விட்டு கடந்த மூன்று ஆண்டுகளாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வருகிறார்.
நான் வீட்டில் இருந்த போது அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் தன வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார். அவருடன் வந்திருந்த ஏழு பேர் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வாலிபர் நேராக என்னிடம் வந்து என்னுடைய மகளை காதலிப்பதாக தெரிவித்தார்.
எனது மகளை அவருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கூறினார். அதன் பின்னர், அவர் எனது மகளுடன் சேர்ந்து எடுத்த புகைபடத்தை அவரது செல்போனில் வைத்திருந்தார். திருமணம் செய்து வைக்க மறுத்தால் எனது மகளை கடத்தி சென்று திருமணம் செய்து விடுவதாக என்னை மிரட்டி விட்டு சென்றார்.
ஆகவே, அந்த வாலிபர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எனது மகளுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை பறிமுதல் செய்து அழிப்பதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த புகாரி தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
English Summary
near pollachi young man threatening girl friend father