நீட் அனிதாவின் அண்ணன், பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது.!
NEET ANITHA BROTHER ARREST
நீட் தேர்வு நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் அண்ணன் அருண்குமார், பெண் வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கணவன் மனைவியிடம் தகராறு செய்த வழக்கில், நீட் தேர்வு அனிதாவின் அண்ணன் அருண்குமார் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அரியலூர் மாவட்டம், செந்துறை அடுத்த குழுமூர், பெரியார் நகரில் செந்தில் - வசந்தி என்ற தம்பதி வசித்து வருகின்றனர். அதே பகுதியில் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் குடும்பமும் வசித்து வருகிறது.
இந்நிலையில், வீட்டின் அருகே வசந்தி நின்று கொண்டிருந்தபோது, அனிதாவின் இரண்டாவது சகோதரர் அருண்குமார், இரு சக்கர வாகனத்தை விபத்து ஏற்படுத்தும் விதமாக தாறுமாறாக ஓட்டிவந்துள்ளார். . இது குறித்து தனது கணவரிடம் வசந்தி தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து கணவர் செந்தில், 'இருசக்கர வாகனத்தில் இதுபோல் விபத்து ஏற்படுத்தும் படி செல்லலாமா?" என்று அருண்குமாரை தட்டிக் கேட்டுள்ளார். அப்போது, ஆத்திரமடைந்த அருண்குமார், செந்திலையும் வசந்தியையும் சரமாரியாக தாக்கியதாக சொல்லப்படுகிறது.
இதனால் அவர்கள் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து வசந்தி அளித்த புகாரின் அடிப்படையில், பெண் வன்கொடுமை சட்டத்தின் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் அருண்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
English Summary
NEET ANITHA BROTHER ARREST