மகா கும்பமேளாவுக்கு காங்கிரசார் வராதது ஏன்? துறவிகள் சரமாரி கேள்வி!
Why did Congressmen not come to the Maha Kumbh? Question the monks!
கும்பமேளாவுக்கு காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் வருகை தராதது ஏன் என துறவிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்றுவந்த மகா கும்பமேளா நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது. சுமார் 45 நாட்கள் நடந்த மகா கும்பமேளாவில் பல அரசியல் தலைவர்கள் துறவிகள்,பொதுமக்கள் பங்கேற்று புனித நீராடினர்.
மேலும் கும்பமேளாவில் காங்கிரஸ் தலைவர்களான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் வர இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், கடைசிவரை ராகுலும், பிரியங்காவும் மகா கும்பமேளாவுக்கு வரவே இல்லை.இந்நிலையில், கும்பமேளாவுக்கு காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் வருகை தராதது ஏன் என துறவிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதுதொடர்பாக, உ.பி.யின் அமேதியில் உள்ள பரமஹன்ஸ் மடத்தின் துறவி கூறுகையில், கங்கை தாயின் மடியில் அமர்ந்தால் காங்கிரஸ் செய்யும் மதத்துக்கு எதிரான அரசியல் முடிவுக்கு வந்துவிடும் என்றும் அந்த அச்சத்தால் அவர்கள் மகா கும்பமேளாவுக்கு வரவில்லை என கூறினார். மேலும் தங்களது அரசியலைத் தொடரவே இவர்களைப் போன்ற அரசியல்வாதிகள் இங்கு வருகை தரவில்லை என்றும் பிரயாக்ராஜ் அவர்களது சொந்த குடும்ப பூமியாக இருந்தும் அதை உதாசீனப்படுத்தி விட்டனர் என்றும் இந்தத் தலைவர்கள் சனாதனத்துக்கு எதிரானவர்கள் என்றும் உலக நாடுகளில் இருந்து பலரும் வந்த மகா கும்பமேளாவுக்கு காங்கிரசார் வராதது ஏன்? என கேள்வி எழுப்பினார்.
https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Ftentkotta%2Fvideos%2F1692037228072990%2F&show_text=false&width=476&t=0
https://twitter.com/hashtag/VaVaralamVa?src=hash&ref_src=twsrc%5Etfw
English Summary
Why did Congressmen not come to the Maha Kumbh? Question the monks!