நீட் தேர்வு! மத்திய அரசு கேள்வி கேட்டு இருக்காங்க - அமைச்சர் ரகுபதி பரபரப்பு பேட்டி!
NEET Issue Central Govt Vs TNGovt
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாடு மட்டும் ஏன் விலக்கு கேட்கிறது என்று, மத்திய அரசு கேள்வி கேட்டுள்ளதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து இந்த செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி தெரிவிக்கையில், நீட் தேர்வு மசோதா குறித்து 4வது முறையாக மத்திய உள்துறை அமைச்சகம் கேள்வி கேட்டுள்ளது.
நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவதாக தமிழக அரசு தரப்பில் உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் இருந்து தமிழ்நாடு மட்டும் ஏன் விலக்கு கேட்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் கேள்விக்கு தமிழ்நாடு அரசு சார்பில் உரிய விளக்கம் தற்போது அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பியதில் ஒரு கோப்பு மட்டும் நிலுவையில் உள்ளது. ஆன்லைன் ரம்மி சட்டத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம்.
ஆன்லைன் ரம்மிக்கும், ரம்மிக்கும் உள்ள வேறுபாடுகளை சரியாக விளக்கினோம், ஆனால் உயர்நீதிமன்ற நீதிபதிகள் புரிந்துகொள்ளும் அளவிற்கு விளக்க முடியவில்லை.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் புரிந்து கொள்ளும் வகையில் விளக்குவோம். மற்ற மாநிலங்களில் இருந்து ஆன்லைன் ரம்மிக்கு விளம்பரங்கள் கொடுக்கும் போது தமிழ்நாட்டில் இருந்து கட்டுப்படுத்த முடியாது. தமிழ்நாடு அரசு அவற்றை ஊக்குவிப்பது கிடையாது” என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
English Summary
NEET Issue Central Govt Vs TNGovt