அசத்திய சென்னை ஐஐடி! தேசிய கல்வி நிறுவன தரவரிசை பட்டியலில் முதலிடம்! - Seithipunal
Seithipunal


மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள 2024ம் ஆண்டுக்கான தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைபின் பட்டியலில், இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனமாக சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது.

சென்னை ஐஐடி ஒட்டுமொத்த பிரிவில் சிறந்த பல்கலைக்கழகம் என்ற பெருமையை பெற்றதோடு பொறியியல் பல்கலைக்கழகங்களில் முதலிடத்தையும், தொடர்ந்து 6வது முறையாக இந்தப் பட்டியலில் முதல் இடத்தையும் பெற்றுள்ளது. 

இரண்டாவது இடத்தில் இந்திய அறிவியல் கழகம் (ஐஐஎஸ்சி) - பெங்களூரு, மூன்றாவது இடத்தில் மும்பை ஐஐடி உள்ளன.

ஆராய்ச்சிப் பிரிவுக்கான சிறந்த நிறுவனங்களின் பட்டியல் மற்றும் பல்கலைக்கழகங்கள் பிரிவிலும் பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் முதலிடம் பிடித்துள்ளது. 

இரண்டாவது இடத்தில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU), மூன்றாவது இடத்தில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் உள்ளன.

மேலாண்மை பிரிவு : 

அகமதாபாத் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் (ஐஐஎம்)
ஐஐஎம் பெங்களூரு 
ஐஐஎம் கோழிக்கோடு 

பொறியியல் பிரிவு:

சென்னை ஐஐடி
ஐஐடி டெல்லி
ஐஐடி மும்பை

சிறந்த சட்ட நிறுவனம் பிரிவில் பெங்களூரில் உள்ள தேசிய சட்டப் பள்ளி முதலிடம் பிடித்துள்ளது.

மருத்துவப் பிரிவு: டெல்லி எய்ம்ஸ் முதலிடம் 

பல் மருத்துவப் பிரிவு:  சென்னையின் சவீதா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் அண்ட் டெக்னிக்கல் சயின்சஸ் முதலிடம்

சிறந்த மாநில பொது பல்கலைக்கழகமாக சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் தேர்வாகி உள்ளது. 

சிறந்த திறந்த நிலை பல்கலைக்கழகமாக இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் (IGNOU)

சிறந்த திறன் பல்கலைக்கழகமாக புனேவில் உள்ள சிம்பயோசிஸ் ஸ்கூல் ஆஃப் கம்யூனிகேஷன்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NIRF IIT Madras


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->