தமிழகம் முழுவதும்., 6ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.!
NoBagDay schools
தமிழகத்தில் வரும் 26-ம் தேதி "No Bag Day" கடைபிடிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
6ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தமிழகம் முழுவதும் வரும் பிப்ரவரி 26 ஆம் தேதி புத்தகம் இல்லாத தினம் கடைபிடிக்கப்படும் என்று, பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், "2021-2022 ஆம் ஆண்டுக்கான மத்திய திட்ட ஏற்பளிப்புக் குழு கூட்ட நடவடிக்கை ஒப்புதலின் படி, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு புத்தகமில்லா தினம் என்ற செயல்பாட்டினை நடத்த அனுமதித்து, அதற்காக மாணவர் ஒருவருக்கு 10 ரூபாய் வீதம் 12,63,550 மாணவர்களுக்கு மொத்தம் ரூ.126.355 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களின் மன அழுத்தத்தை நீக்குவதும், மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்தி மாணவர்களின் ஆரோக்கியமான வாழ்விற்கு அடிப்படையான உடல் நலம் மற்றும் மனவளத்தினை மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும்" என்று தெரிவித்துள்ளது.
புத்தகமில்லா அன்றைய தினத்தில், மாணவர்களுக்கு சிற்றுண்டி, பரிசுப் பொருள் வழங்க 1.2 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.