6 ஆண்டுகள் "சம்பளம் வழங்காத" தாசில்தாருக்கு 2 ஆண்டுகள் சிறை.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி.!!
non payment salary case special tahsildar 2 years in jail
சேலம் மாவட்ட ஆதி திராவிடர் நல வாரியத்தில் சமையல்காரராக பணியாற்றி வந்த மூர்த்தி என்பவர் உள்ள தனக்கு 2017 டிசம்பர் 1ம் தேதி முதல் சம்பளம் வழங்கப்படாததால், தனது சம்பள பாக்கியை வழங்க ஆதி திராவிடர் நலத்துறைக்கு உத்தரவிடக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் சமையல்காரர் மூர்த்திக்கு சம்பளம் வழங்க வேண்டும் என 2020ஆம் ஆண்டு செப்டம்பரில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என கூறி மாவட்ட ஆதி திராவிடர் நல அதிகாரி மற்றும் சிறப்பு தாசில்தார் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மூர்த்தி தொடர்ந்தார்.
இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தாசில்தார் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பட்டு தேவானந்த் முன் விசாரணைக்கு வந்தபோது நேரில் ஆஜரான சிறப்பு தாசில்தாரர் ஜாகிர் உசேன் வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதி சம்பளம் வழங்கும் படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு ஓராண்டு சேலம் சிறப்பு தாசில்தாராகவே அவர் பணியாற்றியுள்ளதை சுட்டிக்காட்டி, உத்தரவை அமல்படுத்தாதது குறித்து அதிருப்தி தெரிவித்தார்.
மேலும் சம்பளம் வழங்காமல் இருந்தால் மனுதாரரின் வாழ்வாதாரம் என்னாவது? குழந்தைகளின் படிப்பு, குடும்ப நிலையை எப்படி சமாளிப்பார்? என நீதிபதி கேள்வி எழுப்பினார். சிறப்பு தாசில்தாரரின் நிபந்தனையற்ற மன்னிப்பையும் ஏற்க மறுத்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறப்பு தாசில்தார் ஜாஹீர் உசேனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். நீதிமன்றத்திற்கு தவறான தகவல்களை அளித்ததற்காக குற்றவியல் நடவடிக்கை எடுக்கும்படி உயர் நீதிமன்ற பதிவாளருக்கும் நீதிபதி பட்டு தேவானந்த் உத்தரவிட்டுள்ளார்.
English Summary
non payment salary case special tahsildar 2 years in jail