தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு ஒமைக்ரான்? சற்றுமுன் வெளியான பரபரப்பு தகவல்.!
OMICRON IN TAMILNADU
இந்தியாவில் ஒமைக்ரான் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,270 ஆக அதிகரித்து உள்ளது. நாட்டின் 23 மாநிலங்களில் ஒமைக்ரான் நோய்த்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 450 பேர் ஒமைக்ரான் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டாவதாக தலைநகர் டெல்லியில் 320 பேர் ஒமைக்ரான் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் 109 பேரும், குஜராத் மாநிலத்தில் 97 பேரும், ராஜஸ்தான் மாநிலத்தில் 69 பேரும், தெலங்கானா மாநிலத்தில் 62 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் நம் தமிழகத்தில் 46 பேர் ஒமைக்ரான் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் ஏற்கனவே நாற்பத்தி ஆறு பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், தற்போது மேலும் 74 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இது அதிகாரப்பூர்வ செய்தி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது