வெங்காயத்தின் விலை வீழ்ச்சி.. குப்பையில் கொட்டிய விவசாயிகள்.! - Seithipunal
Seithipunal


ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் வெங்காயத்தின் விலை வீழ்ச்சி அடைந்ததால் விற்பனையாகாத வெங்காயத்தை விவசாயிகள் குப்பையில் கொட்டி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாகவே சின்ன வெங்காயத்தின் வரத்து அதிகரித்திருப்பதால் வெங்காயத்தின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 15 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.7 முதல் ரூ.10 வரை விற்பனை செய்யப்படுகின்றது.

இதனால் விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்திருக்கின்றனர். மேலும், சந்தைக்கு கொண்டு வந்த வெங்காயங்கள் வாங்கப்படாமல் அங்கேயே இருப்பு வைக்கப்பட்டுள்ளதால் வெங்காயம் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வெங்காயத்தை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் குப்பையில் கொட்டும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்கள் மழைக்காலத்தில் மட்டுமே நடக்கும் நிலையில் தற்போது வெயில் காலத்திலும் ஏற்படுகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Onion price decrease in ottanchathiram market


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->