திருப்பூர்: இளம்பெண் குளிப்பதை ஜன்னல் ஓட்டை வழியாக வீடியோ எடுத்த ஆப்ரேட்டர் கைது.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் இளம்பெண் குளிப்பதை ஜன்னல் ஓட்டை வழியாக வீடியோ எடுத்த  ஆப்ரேட்டரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூரை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் சம்பவத்தன்று இரவு தனது வீட்டு குளியலறையில் குளித்துக்கொண்டிருந்தபோது, யாரோ ஒருவர் ஜன்னலில் உள்ள துவாரம் வழியாக செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த இளம் பெண் இது குறித்து குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட குடும்பத்தினர் குளியல் அறை பின்னால் இருட்டில் மறைந்திருந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் அதே பகுதியை சேர்ந்த குடிநீர் தொட்டி ஆபரேட்டர் செல்வராஜ் (55) என்பது தெரியவந்தது.

இதையடுத்து இளம்பெண்ணின் குடும்பத்தினர் செல்வராஜிடம் இதுகுறித்து கேட்டபோது, வீடியோ எடுத்தது பற்றி புகார் செய்தால் காட்சிகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து இளம் பெண்ணின் குடும்பத்தினர் இதுகுறித்து காங்கயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் செல்வராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Operator arrested for taking video of young woman bathing in Tiruppur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->