கச்சத்தீவு விகாரத்தில் புது திருப்பம்! ப.சிதம்பரம் பரபரப்பு டிவிட்!
P Chidambaram Tweet about Katchatheevu
கச்சத்தீவு விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப சிதம்பரம் எழுப்பியுள்ள கேள்வி, இந்த விவகாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்த ப.சிதம்பரத்தின் டிவிட்டர் பதிவில், "கச்சத்தீவு பிரச்னையில் உண்மையில் என்ன நடந்தது என்று 27-1-2015 அன்று இந்திய அரசு தந்த கடிதம் தெளிவுபடுத்தியள்ளது.
அன்று பிரதமராக இருந்தவர் திரு நரேந்திர மோடி
அன்று வெளியறவுத் துறையில் உயர் அதிகாரியாக இருந்தவர் திரு ஜெய்சங்கர்.
அந்த 27-1-2015 ஆம் நாள் கடிதத்தைப் பற்றிக் கேட்டால், பா ஜ க
தலைவர்கள் ஏன் நெளிகிறார்கள், நழுவுகிறார்கள்?
கச்சத்தீவு பற்றி உண்மைக்குப் புறம்பான காட்டமான அறிக்கைகளை வெளியிடும் பா ஜ க தலைவர்களுக்கு இலங்கையில் வாழும் 25 லட்சம் இலங்கைத் தமிழர்கள் மற்றும் 10 லட்சம் இந்தியத் தமிழர்களைப் பற்றிக் கவலையில்லை போலத் தெரிகிறது
உங்கள் காட்டத்தை இலங்கையின் மீது காட்டி 35 லட்சம் தமிழர்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கி் விடாதீர்கள்" என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
English Summary
P Chidambaram Tweet about Katchatheevu