#BREAKING || உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.!!
Palamedu jallikattu started in Madurai
மாட்டுப் பொங்கலை ஒட்டி மதுரை மாவட்டம் பாலமேட்டில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தொடங்கி வைத்தனர். காலை 7 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை கொடி அசைத்து தொடங்கி வைக்க உள்ளனர். பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 1,000 காளைகள், 700 மாடு பிடி வீரர்கள் பங்கேற்க உள்ளனர்
ஆன்லைன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு போட்டிக்கான டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. போட்டியில் பங்கேற்க இருக்கும் காளைகளுக்கு இறுதி கட்ட மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. பாலமேடு ஜல்லிக்கட்டில் 160 பேர் கொண்ட மருத்துவ குழு, 90 பேர் கொண்ட 40 கால்நடை மருத்துவ குழு தயாராக உள்ளது. 15 ஆம்புலன்ஸ் மற்றும் கால்நடைகளுக்கான ஆம்புலன்ஸ் தயார் நிலையில் உள்ளன. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்கு 3675 காளைகள், 1412 வீரர்கள் முன்பதிவு செய்து செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Palamedu jallikattu started in Madurai