பகுதிநேர ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..!
part time teachers retirement age extended
பள்ளிக்கல்வித்துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது,
கடந்த 2012-ம் ஆண்டு தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இதில் பலர்,பல காரணங்களால் பணி விலகிய நிலையில், தற்போது 12 ஆயிரம் ஆசிரியர்கள் 10 ஆயிரம் ரூபாய் ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர்.
அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், தொழிற்கல்வி பாடங்கள், தையல், இசை, கணினி அறிவியல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல் திறன் கல்வி போன்ற பாடங்களை பகுதி நேர ஆசிரியர்கள் கற்பித்து வருகின்றனர்.
இந்நிலையில், முழு நேர அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60-ஆக உயர்த்தப்பட்ட நிலையில், பகுதிநேர ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதும் 60-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
part time teachers retirement age extended