பௌர்ணமிக்கு திருவண்ணாமலை போகணுமா கவலைவேண்டாம்..திருவண்ணாமலைக்கு 585 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!! - Seithipunal
Seithipunal


வைகாசி பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு பக்தர்கள் அதிகஅளவில் வருவார். இதனால் போக்குவரத்து கழகம் இன்று 585 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

வைகாசி பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருடசேவை உற்சவம் தமிழ்நாட்டின் உள்ள பல்வேறு பெருமாள் திருதளங்களில் விமர்ச்சயாக நடைபெற்று வருகிறது.அதே இன்று வைகாசி பவுர்ணமி அதனால், திருவண்ணாமலை அருணாசலஸ்வரர் திருகோவிலுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து பக்தர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பௌர்ணமியை முன்னிட்டு சென்னையில் இருந்து பிற பகுதிகளில் இருந்து திருவண்ணாமலை வரும் பயணிகளுக்கு எதுவாக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் கூடுதலாக பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது.

அந்தவகையில் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் 330 சிறப்பு பேருந்துகள் இயக்கபடும் என்றும் பிற பேருந்து நிலையங்களில் இருந்து தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் 225 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

 பேருந்துகளில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சென்னை விளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து குளிர்சாதனம் பேருந்துகள் மற்றும் படுக்கை இருக்கை வசதி கொண்ட பேருந்துகள் இயக்கப்படும் என்றும் பிற பேருந்து நிலையங்களில் இருந்து முன்பதிவு பேருந்து இயக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pavurnami occasion Tiruvannamalai 585 special bus


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->