வருடத்திற்கு 6 முறையாவது 15 கிலோ மீட்டர் சுற்றி வரும் மக்கள் -அரசுக்கு கோரிக்கை..! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே சவுந்திர சோழபுரம் கிராமத்தில் உள்ள வெள்ளாற்றில் கடலூர் - அரியலூர் மாவட்டம் கோட்டைக்காடு கிராமத்தை இணைக்கும் தரைப்பாலம் உள்ளது. இந்த வெள்ளாற்றில் அரியலூர் மாவட்டத்தில் இருந்து வரும் ஆனாவாரி ஓடை, உப்பு ஓடை ஆகிய இரண்டு ஓடை தண்ணீரும் வெள்ளாற்றில் கலந்து அதன் மூலமாக கடலில் சென்று கலக்கிறது. 

கடந்த மூன்று நாட்களாக இரவு நேரங்களில் விட்டு விட்டு மழை பொழிவதால் கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் வயல்வெளி பகுதியில் மழைநீர் வெள்ளம் ஏற்பட்டதால் வெள்ளாற்றின் குறுக்கே தற்காலிகமாக அமைக்கப்பட்ட  தரைபாலம் அடித்து செல்லப்பட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் சவுந்தர சோழபுரம், கோட்டைக்காடு, ஆலத்தியூர், ஆதனக்குறிச்சி, முள்ளுக்குறிச்சி, தெத்தேரி, முதுகுளம், உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் 15 கிலோமீட்டர் சுற்றி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. 

பொது மக்கள் தங்களின் அடிப்படை தேவைக்காகவும், விவசாய தேவைக்காகவும் இந்த தரைபாலத்தின் வழியாக சென்றுவந்த நிலையில் தற்போது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசால் கடந்த 2013 ஆம் ஆண்டில் நிதி ஒதுக்கப்பட்டு 11 கோடி ரூபாய் மதிப்பில் கோட்டைக்காடு சௌந்தர சோழபுரம் இடையே புதிய மேல்மட்டபாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், பாலம் 90 சதவீதம் கட்டி முடிக்கப்பட்டு நிதி பற்றாக்குறை காரணமாக இணைப்பு சாலை அமைக்காமல் கட்டிடப் பணி நிறுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அப்பகுதி மக்கள்  இந்த மேம்பாலத்தை விரைந்து முடிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வரும்  தரைப்பாலத்தின் பணியை விரைந்து முடிக்க வேண்டும், ஒவ்வொரு ஆண்டும் குறைந்த பட்சம் 6 முறை தரைப்பாலம் துண்டிக்கப்பட்டு கிராம மக்கள் பள்ளி, கல்லூரிக்கு செல்லவும் அடிப்படைத் தேவைக்காக கடலூர் மாவட்டத்திற்கு வருவதற்கும் விவசாய தேவைக்காக தரைப் பாலத்தை கடந்து செல்வதுமாக இருந்து வந்த நிலையில் தற்போது 15 கிலோமீட்டர் சுற்றி வருவது தொடர் கதையாக உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

People travel around 15 km at least 6 times a year - request to the government


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->