அமைச்சர் பொன்முடியின் உதவியாளர் மீதான வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் போது அமைச்சர் பொன்முடியுடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. 

அப்போது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் பொன்முடியுடன் அவரது உதவியாளராக பணியாற்றிய அரசு ஊழியரான சோமஸ்கந்தன் என்பவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. 

இது தொடர்பாக சோமஸ்கந்தன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி லோக் ஜனசக்தி கட்சியின் மாநில பொதுச் செயலாளர் செல்வபாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக இருப்பதால் வழக்கின் விசாரணையை ஒத்தி வக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். 

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி இந்த வழக்கின் விசாரணையை ஜூன் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டு உள்ளார். தற்போது நடைபெறும் மக்களவை பொதுத் தேர்தலில் அரசு ஊழியர் திமுக தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டதாக அதிமுக தரப்பு தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Petition filed in madrashc against govt staff who campaign for DMK


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->