பழனியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!...4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்! - Seithipunal
Seithipunal


தமிழ் கடவுள் முருகனின் 3ம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம், பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.

குறிப்பாக இங்கு தைப்பூசம், வைகாசி விசாகம், சூரசம்ஹாரம் போன்ற முக்கிய  திருவிழாவின் போது ஏராளமான பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து சுவாமி தரிசனம் செய்வர்.  அதுமட்டுமல்லாமல், விடுமுறை நாட்களிலும் அதிக அளவிலான பக்தர்கள் வருவதால் வருடம் முழுவதும் திருவிழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது.

இந்த நிலையில் இன்று மாத கார்த்திகை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமானோர் குடும்பத்துடன் பழனிக்கு படையெடுத்து உள்ளனர்.

இதன் காரணமாக பேருந்து நிலையம், கிரிவீதி மற்றும் அடிவாரம் உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் படிப்பாதை, யானைப்பாதை, ரயில், ரோப்கார் நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

மேலும், மலைக்கோவிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டதால், பொது தரிசனம், சிறப்பு தரிசனங்களிலும் நீண்ட வரிசை காணப்பட்டது. இதனால் சுமார் 4 மணிநேரத்திற்கு மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pilgrims of devotees in Palani waited for 4 hours to see Swami


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->