அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு ரத்து - பரபரப்பு அறிக்கை!
PMK Dr Ramadoss Say Neet Exam 2024 and 2025
கடந்த மே ஐந்தாம் தேதி நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்தது மற்றும் தற்போது நீட் தேர்வு முடிவுகளில் முறைகேடு நடந்துள்ளதாக மாணவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மேலும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக பரப்பரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
இதற்கிடையே நீட் தேர்வு மாணவர்கள் நீட் தேர்வை மீண்டும் நடத்த கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், இந்தாண்டு நீட் மறு தேர்வு நடத்த வேண்டும், அடுத்தாண்டு நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்று, பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்த அவரின் அறிக்கையில், "2024ம் ஆண்டு இளநிலை மருத்துப்படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வில் எந்த வகையிலும் சாத்தியமற்ற வகையில் சில மாணவர்களுக்கு மட்டும் மதிப்பெண்கள் வாரி இறைக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது;
நீட் தேர்வு எதற்காக உருவாக்கப்பட்டதோ, அந்த நோக்கங்களை நிறைவேற்றவில்லை என கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த புதிய குற்றச்சாட்டு யாருக்கும் பயனளிக்காத நீட் நுழைவுத்தேர்வை உடனே ரத்து செய்ய வேண்டும்.
2024ம் ஆண்டு இளநிலை மருத்துப்படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வில் எந்த வகையிலும் சாத்தியமற்ற வகையில் சில மாணவர்களுக்கு மட்டும் மதிப்பெண்கள் வாரி இறைக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது;
நீட் தேர்வு எதற்காக உருவாக்கப்பட்டதோ, அந்த நோக்கங்களை நிறைவேற்றவில்லை என கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த புதிய குற்றச்சாட்டு யாருக்கும் பயனளிக்காத நீட் நுழைவுத்தேர்வை உடனே ரத்து செய்ய வேண்டும்” என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்
English Summary
PMK Dr Ramadoss Say Neet Exam 2024 and 2025