தேனி : திடீரென உயிரிழந்த போலீஸ் ஏட்டு - பணியில் இருந்தபோது நேர்ந்த கொடூரம்.!!
police officer died on duty in theni
தேனி : திடீரென உயிரிழந்த போலீஸ் ஏட்டு - பணியில் இருந்தபோது நேர்ந்த கொடூரம்.!!
தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் அபுகனி-ஷகிலாபேகம். இவர்களுக்கு ஒரு மகள், மூன்று மகன்கள் உள்ளனர். ஷகிலாபேகம் குமுளிபகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். அபுகனி கூடலூர் தெற்கு போலீசில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார்.
இதற்காக அவர்கள் குடும்பத்துடன் குமுளி அருகே உள்ள தாமரைக்கண்டம் பகுதியில் வசித்து வந்தனர். இந்த நிலையில் அபுகனி இரவு நேர ரோந்து பணிக்காக ஓட்டுநராக சென்றார். அப்போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைப்பார்த்த மற்ற போலீசார் அவரை மீட்டு உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால், அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதேபோல், கடந்த 10 நாட்களுக்கு முன்பு கூடலூர் தெற்கு போலீசில் பணிபுரிந்த கிட்டுராஜன் பணியின் போதே உயிரிழந்தார். இதேபோல் பிரபு என்ற போலீஸ்காரர் இரண்டு மாதத்திற்கு முன்பு உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக சக போலீசார்கள் தெரிவிக்கையில், "பொதுவாகவே போலீசாருக்கு பணிச்சுமை அதிகம். சில இடங்களில் பணியிடங்கள் காலியாக உள்ளது நிரப்பபடவில்லை. போலீசார் பற்றாக்குறையால் அவர்களுக்கு மேலும் பணிச்சுமை ஏற்படுகிறது.
இதன் காரணமாக மனஉளைச்சல் மற்றும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு திடீர் மரணங்கள் நிகழ்கிறது. ஆகவே, போலீசாருக்கு மனநல ஆலோசனை மற்றும் போதிய அளவு ஓய்வு வழங்கவேண்டும் என்றுத் தெரிவித்தார்.
English Summary
police officer died on duty in theni