தூத்துக்குடி : மாமனாரின் உடலை வாங்க மறுத்த மருமகன்.! இது தான் காரணமா? - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி : மாமனாரின் உடலை வாங்க மறுத்த மருமகன்.! இது தான் காரணமா?

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறுமுகநேரி புறக்காவல் நிலையம் அருகில் 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சடலமாகக் கிடந்தார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து பொலிஸாருக்குத் தகவல் அளித்துள்ளனர்.

அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் போலீஸார் உயிரிழந்த அந்த முதியவர் யார்? எனத் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

அந்த விசாரணையில், உயிரிழந்த முதியவர் சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த தனசீலன் என்பதுத் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் தனசீலனின்  மருமகன் மாடத்தங்கம் என்பவரிடம் உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்யுமாறு அறிவுறுத்தினர். 

அதற்கு அவர், என் மனைவிக்கும், மாமனாருக்கும் பல ஆண்டுகளாக பேச்சுவார்த்தை இல்லை. இதனால் அவரது இறுதி சடங்கை செய்ய விருப்பம் இல்லை என்றுத் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீஸாரே உயிரிழந்த முதியவர் தனசீலன் உடலை குழிதோண்டி அடக்கம் செய்தனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police officers Funeral in old man body in thoothukudi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->