கணவனுடன் தகராறு.. கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி..!
Police searching for woman
கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளத்தை சேர்ந்தவர் ராஜா. இவருக்கு திருமணமாகி வசந்தி என்ற மனைவியும் ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது. சம்பவத்தன்று கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இது ஆத்திரமடைந்த வசந்தி கணவன் மீது சமையலறையில் கொதித்துக் கொண்டிருந்த எண்ணெயை ஊற்றி உள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் தலைமறைவாக உள்ள வசந்தியை தேடி வருகின்றனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.oli
English Summary
Police searching for woman