மதுபோதையில் வாக்குவாதம்.. காதல் மனைவி மீது கொலைவெறி தாக்குதல்..! - Seithipunal
Seithipunal


மதுபோதையில் மனைவி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.    

சென்னை நங்கநல்லூர் பகுதியில் வசித்து வருபவர் கமலகண்ணன் இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வினிதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. கமலகண்ணனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தன்று வழக்கம்போல இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே வீட்டில் இருந்த பீர் பாட்டிலை எடுத்து வினிதாவின் தலையை அடித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த காவல்துறையினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தப்பி சென்ற கமலகண்ணனை தேடி வருகின்றனர். மதுபோதையில் மனைவி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police searching the man who beaten his wife


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->