திருவிடைமருதூர் அரசு மருத்துவனையில் போதிய மருத்துவர்கள் & மின்சாரம் இல்லாததால் நோயாளிகள் அவதி..! - Seithipunal
Seithipunal


அரசு மருத்துவமனையில் மின்சாரம் இன்றி பிரசவம் பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூரில் அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. அன்மையில் தரம் உயர்த்தப்பட்ட இந்த மருத்துவமனையில் இரவு மருத்துவமனையில் பொதுமான மருத்துவர்கள் இல்லாததாலும் சரியான நேரத்தில் மின்சாரம் இல்லை என்பதாலும் நோயாளிகள் அவதியடைந்தனர்.

இந்நிலையில், நேற்று பிரசவத்திற்காக கர்ப்பிணி பெண் ஒருவர் சிகிச்சைக்காக வந்திருந்தனர். அப்போது அங்கு மின்சாரம் இல்லாததால் அவர்கள் யூ.பி.எஸ் உதவியுடன் விளக்கு வெளிச்சத்தில் பிரசவம் பார்த்துள்ளனர். அதே போல பலத்த காயமடைந்த ஒருவரை கும்பகோணம்  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால், பல நோயாளிகள் அவதிக்குள்ளாக்கி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Power Cut In Hospital


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->