தூத்துக்குடி || மின் ஊழியர் வெட்டி கொலை... மர்ம நபர்களுக்கு வலைவீச்சு..! - Seithipunal
Seithipunal


மின் ஊழியர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் மின்பகிர்மான அலுவலகம் அமைந்துள்ளது.  இதில், ஆனந்த பாண்டி என்பவர் மின்பாதை ஆய்வாளரான  பணி வந்தார். பணியில் இருப்பவர்கள்     ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கணக்கெடுக்க வேண்டும் என கூறப்படுகிறது.

அதன் படி, நேற்றிரவு 12 மணி வரை இவர் இந்த மின் கணக்கை எடுத்துள்ளார்.  ஆனால், அதன் பின் கணக்கெடுக்கவில்லை என கூறப்படுகிறது. இன்று காலை பணி மாற்றத்திற்காக வந்தவர் பார்த்த போது ஆனந்த பாண்டியன் உடலில் காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Power distribution Worker Murdered in Thoothukudi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->