உரிய நேரத்தில் பேருந்து இயக்கம் : தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்த, உயர்நீதிமன்ற மதுரை கிளை.! - Seithipunal
Seithipunal


தனியார் பேருந்துகள் உரிய நேரத்தில் இயக்கவது குறித்து போக்குவரத்துத் துறை மண்டல அதிகாரி 3 மாதத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரிய மனுவை உயர்நீதிமன்றம் மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

திருச்சியைச் சேர்ந்த கார்த்திகேயராஜா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில், தனியார் பேருந்துகள் அரசால் ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட நேரத்திற்கு இயக்க உத்தரவிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், “நான் திருச்சியில் இருந்து பாளையத்திற்கு தனியார் பேருந்து இயக்கி வருகிறேன். எனது பேருந்தை திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து மதியம் 3:24 மணிக்கு எடுக்க அரசு போக்குவரத்து கழகம் நேரம் ஒதுக்கி உள்ளது. இந்த நிலையில், எனக்கு அடுத்து திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து கரூருக்கு செல்ல வேண்டிய பேருந்து மதியம் 3:54 மணிக்கு செல்ல நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த பேருந்து குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே இயக்கப்படுவதால் எனக்கும் மற்ற அரசு பேருந்துகளுக்கும் வருவாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இதனால், தனியார் பேருந்துகள் அரசால் ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட நேரத்திற்கு இயக்க உத்தரவிட வேண்டும்.” என்று மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, தனியார் பேருந்துகள் உரிய நேரத்தில் இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் 3 மாதத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

இதனை தொடர்ந்து, இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி கரூரைச் சேர்ந்த சுவாமி அப்பன் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே தனது பேருந்து இயக்குவதாக ஒப்புக் கொண்டதால், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

private bus time case HC Division order


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->