போக்குவரத்து துறை அமைச்சரைக் கண்டித்து போராட்டம்..! - Seithipunal
Seithipunal


அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம் முன்பு ஏஐடியூசி கௌரவ தலைவர் ராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில்,பொதுச் செயலாளர் விஜயகுமார், மண்டல தலைவர் செல்வராஜ், பொருளாளர் சக்திவேல், சி ஐ டி யு கிளைத் தலைவர் ஸ்ரீ முருகேசன், செயலாளர் சிரும்பண்ணன், பொருளாளர் கருப்பையா, ஓய்வு பெற்றோர் நல அமைப்பு கரூர் போக்குவரத்து கழக மண்டல தலைவர் ராஜமாணிக்கம், செயலாளர் ராஜன், நிர்வாக குழு உறுப்பினர் ரத்தினம் உள்ளிட்டபலர் கலந்து கொண்டனர். 

ஆர்ப்பாட்டத்தில், ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை வழங்காமல் பல கட்ட பேச்சு வார்த்தையில் வஞ்சித்த போக்குவரத்து கழகத்தை கண்டித்தும், இனி வருங்காலம் நாலு வருஷம் ஊதிய உயர்வு ஒப்பந்தம் மூன்றாண்டு என்பதை நான்காண்டாக மாற்றி அறிவித்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரை கண்டித்தும், ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 81 மாத பிஏ நிலுவைத் தொகையை வழங்காமல் காலதாமதம் படுத்தி வரும் தமிழக போக்குவரத்து துறையை கண்டித்தும், கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Protest against transport minister


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->