குற்றாலத்தில் அனைத்து அருவியிலும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சாரல் மழை பொழிந்து குளுமையாக இருக்கும். இதனால் அங்கு ரம்மியமான சூழல் நிலவும்.

இதனையடுத்து இந்த மாதங்களில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவது வழக்கம். குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்து விழும் தண்ணீரில் குளித்து மகிழுவதற்காகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

இந்த நிலையில் அங்கு கனமழை பெய்து வருவதால், நீர்வரத்து அதிகரிதுள்ளது . இதன் காரணமாக குற்றாலத்தில் அனைத்து அருவியிலும் மக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐந்தருவி , பழைய குற்றாலம் , பிரதான அருவி உள்ளிட்ட அனைத்து அருவியிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Public and tourists are prohibited from bathing in all the waterfalls in Courtalam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->